சுஜித்தின் பெற்றோரிடம் லாரன்ஸ் கோரிக்கை

சுஜித்தின் பெற்றோரிடம் லாரன்ஸ் கோரிக்கை

சுஜித்தின் பெற்றோரிடம் லாரன்ஸ் கோரிக்கை

எழுத்தாளர் Chandrasekaram Chandravadani

30 Oct, 2019 | 3:29 pm

திருச்சியின் மணப்பாறைப் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றில் வீழ்ந்து, பல மணி நேரப் போராட்டங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் சுஜித்தின் பெற்றோரிடம் நடிகர் ராகவா லாரன்ஸ் அன்புக் கட்டளை ஒன்றை விடுத்துள்ளார்.

 

‘இன்று சுஜித் எமது தேசத்தின் பிள்ளையாகிவிட்டான். அதேபோல், இன்று எத்தனையோ குழந்தைகள் பெற்றோரின்றி வாழ்கின்றார்கள். ஆகவே, அவர்களில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து அந்தக் குழந்தைக்கு சுஜித் என பெயரிட்டு வளர்க்குமாறு கேட்டுக்கொள்வதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நடந்தால் சுஜித் உங்களுடன் இருப்பது போலாகும் நிலையில், அவனது ஆத்மாவும் சாந்தியடையும் என கூறியுள்ள லாரன்ஸ், அவ்வாறு தத்தெடுப்பதெனில் தானே தத்தெடுத்துக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமன்றி, அவ்வாறு தத்தெடுக்கப்படும் குழந்தையின் படிப்புச் செலவு முழுவதையும் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் சுஜித்தின் பெற்றோரிடம் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்