கோட்டாபயவின் அரசாங்கத்தில் மஹிந்தவே பிரதமர்; ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கத்தை மாற்றுவதாக மஹிந்த அமரவீர தெரிவிப்பு

கோட்டாபயவின் அரசாங்கத்தில் மஹிந்தவே பிரதமர்; ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கத்தை மாற்றுவதாக மஹிந்த அமரவீர தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2019 | 9:25 pm

Colombo (News 1st) கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியானதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முடியாது என்பதால், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கி மஹிந்த ராஜபக்ஸவை நியமிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

மைத்திரிபால சிறிசேன அதிகாரத்திற்கு வந்த போது ஐக்கிய தேசியக் கட்சிக்கு 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். எங்களிடத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. எனினும், ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் பதவியில் அப்போது நியமித்தார். ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து அடுத்த நாள் பிரதமர் பதவிப்பிரமாணம் செய்தார். அப்போது 147 பேர் எங்களிடம் இருந்தனர். அந்த முறையை பயன்படுத்தி மஹிந்த ராஜபக்ஸவை நாங்கள் பிரதமராக நியமிப்போம்

என மஹிந்த அமரவீர கூறினார்.

கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியானதன் பின்னர் 120-இற்கு அதிக பலத்துடன் அசாங்கத்தினை உருவாக்குவதற்கு தம்மால் முடியும் எனவும் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்விடயங்களைத் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்