ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அம்பாறையில் கைதான 13 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அம்பாறையில் கைதான 13 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் அம்பாறையில் கைதான 13 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2019 | 5:24 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அம்பாறையில் கைது செய்யப்பட்ட 13 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஐ.என்.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

13 சந்தேகநபர்களும் இரண்டு குழுக்களாக இன்று முற்பகல் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

அவசரகால சட்டத்தின் கீழ் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த 13 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி, கல்முனை சாய்ந்தமருது சம்மாந்துறை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் ஒருவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை நீதவான் நிராகரித்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய, பிணை கோரிக்கை தொடர்பில் ஆராயப்படும் என நீதவான் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்