ஊழல் மோசடிக்காரர்களுக்கு எனது ஆட்சியில் பதவி இல்லை: சஜித் பிரேமதாச

ஊழல் மோசடிக்காரர்களுக்கு எனது ஆட்சியில் பதவி இல்லை: சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Bella Dalima

30 Oct, 2019 | 9:13 pm

Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார்.

இதன்போது, அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் பதவி தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அடுத்த வருடத்திலிருந்து பொருளாதாரத்தினை மாற்றுவது உங்களது பிரதமர் பதவியின் கீழா என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் ஆம் என பதிலளித்தார்.

இதேவேளை, தம்புள்ளையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, அவரின் அரசாங்கத்தில் பதவி வழங்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளித்தார்.

எதிர்காலத்தில் எனது பேனாவினால் கையொப்பமிட்டு நியமனம் வழங்கப்படுமாக இருந்தால், அதுதான் அனுபவ ரீதியான தீர்மானம். எந்த ஒரு காரணத்திற்காகவும் நாட்டினை சூறையாடிய, கொள்ளையடித்த, ஊழல் மோசடி செய்த எந்த ஒருவருக்கும் சஜித் பிரேமதாசவின் ஆட்சியில் கையொப்பத்துடன் எந்த ஒரு நியமனமும் வழங்கப்படாது என்பதை நான் கூற விரும்புகின்றேன்.

என அவர் குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்