ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை

ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை

ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை

எழுத்தாளர் Bella Dalima

29 Oct, 2019 | 10:41 pm

Colombo (News 1st) பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரரான ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூதாட்டக்காரர்கள் தன்னை பல சந்தர்ப்பங்களில் தொடர்புகொண்டமை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு அறிவிக்காமையின் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பங்களாதேஷ் வீரர்கள் ஊதிய பிரச்சினையை முன்வைத்து கிரிக்கெட் பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர்.

இந்த கிரிக்கெட் பகிஷ்கரிப்பிற்கு ஷகிப் அல் ஹசன் தலைமை தாங்கியிருந்தார்.

ஷகிப் அல் ஹசன் சர்வதேச ஒருநாள் அரங்கில் முதற்தர சகலதுறை வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்