சிறிய ரக வாகனங்களுக்கு சொகுசு வரி இல்லை: நிதி அமைச்சு அறிவிப்பு

சிறிய ரக வாகனங்களுக்கு சொகுசு வரி இல்லை: நிதி அமைச்சு அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2019 | 4:28 pm

Colombo (News 1st) கார்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சொகுசு வரி சிறிய ரக வாகனங்களுக்கு அமுல்படுத்தப்பட மாட்டாது என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சொகுசு வரியை மாற்றுவதற்காக நிதி அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் சமர்ப்பித்த இடைக்கால கணக்கறிக்கைக்கு பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்தது.

அதற்கமைய, Toyota Vitz,Suzuki Every,Toyota Roomy, Suzuki Alto,Suzuki Baleno,Daihatsu Petrol,Honda Grace, Suzuki Wegon R,Toyota Aqua போன்ற வாகனங்களுக்கு சொகுசு வரி அமுல்படுத்தப்படாது என நிதி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Axio,Premio மற்றும் Allion ஆகிய வாகனங்களுக்கும் சொகுசு வரி அறவிடப்படாது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வேன், Single Cab, Double Cab, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு இந்த வரி அமுல்படுத்தப்பட மாட்டாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை காலம் சொகுசு வரி அறிவிடப்பட்ட Double Cab-களுக்கு எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் சொகுசு வரி அறிவிடப்பட மாட்டாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதி தொடக்கம் வாகனங்களுக்கான சொகுசு வரி அமுல்படுத்தப்பட்டது.

35 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான டீசல், பெட்ரோல் கார்கள், ஜீப்களை இறக்குமதி செய்யும் போது இந்த சொகுசு வரி அறிவிடப்படும்.

CIF பெறுமதி கொண்ட 40 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான மற்றும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய 60 இலட்சம் ரூபா பெறுமதியான வாகனங்களுக்கு சொகுசு வரி அறவிடப்படவுள்ளது.

இதேவேளை, சிலிண்டர் கொள்ளளவிற்கு அமைய அறிவிடப்படும் வரியும் எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் நீக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கடன் தவணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதும், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்படவுள்ளதுமான வாகனங்களுக்கும் வரி நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்