இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான திகதி அறிவிப்பு

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான திகதி அறிவிப்பு

இலங்கை – பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான திகதி அறிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

29 Oct, 2019 | 9:04 am

Colombo (News 1st) இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஓர் அங்கமாக இந்தத் தொடர் அமையவுள்ளது.

இந்த இரு போட்டிகளும் இஸ்லாமாபாத் மற்றும் கராச்சி மைதானங்களில் நடத்தப்படவுள்ளன.

2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் இஸ்லாமாபாத் மைதானத்தில் டெஸ்ட் போட்டியொன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதியும் இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதியும் நடைபெறவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்