நாம் யுத்தத்தை நிறைவு செய்தவர்கள் - கோட்டாபய ராஜபக்ஸ

by Staff Writer 28-10-2019 | 8:21 PM
Colombo (News 1st) ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று (28) வட மாகாணத்தின் சில பகுதிகளில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டார். வவுனியாவிற்கு சென்ற கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடும் மழைக்கு மத்தியிலும் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
நாம் யுத்தத்தை ஆரம்பிக்கவில்லை. நாம் யுத்தத்தை நிறைவுசெய்தவர்கள். இந்த மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களுக்கு நாம் ஒருவிடயத்தை கூறுகின்றோம். சிலர் உங்களை தினமும் கடந்த காலத்தை வைத்து வாழ வைக்க முயல்கின்றனர். எனினும் நான் உங்களுக்கான எதிர்காலத்தை காண்பிக்கின்றென். சுதந்திரத்தின் பின்னர் 70 வருடங்கள் கடந்துள்ள போதிலும், பல்வேறு தலைவர்கள், பல்வேறு பொய் வாக்குறுதிகளை வழங்கி, உங்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர். எனினும் உங்களை வாழ்க்கையை வெற்றிப் பாதைக்குக் கொண்டுசெல்லும் வகையில், இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்ய கூடிய வகையில், இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாயப்புக்களை வழங்க கூடிய வகையில், சிறந்த கல்வித் திட்டமொன்றை நாம் முன்வைப்போம். இந்த மாகாணத்தை எந்த அரசாங்கத்தினாலும் அபிவிருத்தி செய்ய முடியவில்லை. எனினும் நாம் எமது அரசாங்கத்தின் காலத்தில் இந்தப் பகுதியின் அபிவிருத்தியை ஆரம்பித்தோம். அந்த அபிவிருத்தியை தொடர்ந்து முன்னெடுக்க இந்த அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. அன்று இருந்த நிலமையை நாம் முடிவுக்கு கொண்டு வந்த பின்னர் அவர்களுக்கு நாம் புனர்வாழ்வளித்தோம். உலகில் சிறந்த புனர்வாழ்வு திட்டத்தை நாமே முன்னெடுத்தோம். அவர்களை நாம் சமூகமயப்படுத்தினோம். அவர்களை நாம் சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு இணைத்துக் கொண்டோம். அதேபோன்று நாம் தொழிழ்சாலைகளை ஆரம்பித்தோம். தனியார் பிரிவை நாம் பலப்படுத்தினோம். எதிர்காலத்திலும் இந்த மாகாணத்தில் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கும் தனியார் பிரிவை பலப்படுத்துவதற்கும், தேவையான வசதிகளை வழங்குவோம். அவர்களுக்கு தொழிற்பயிற்சியை வழங்கவும் தேவையான திட்டங்களை முன்னெடுப்போம். இந்த மாகாணத்தில் அன்று நாம் பாரிய நிதியை முதலீடு செய்து அபிவிருத்தி செய்தோம். அந்த அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்ல எம்மாலே முடியும். அபிவிருத்தியின் மூலமே உங்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.
அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஸ இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார். நாம் அன்று இந்தப் பகுதிகளில் மேற்கொண்ட சேவைகளை கடந்த 5 வருடங்களில் இங்கு காணமுடியவில்லை. அன்று உங்களுக்கு சுயிங்கம் வழங்கினார்கள். பிரேஸ்லட் வழங்கினார்கள். எனவே கடந்த முறை போன்று இம்முறை செயற்பட மாட்டீர்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. உங்களுக்கு காணிப் பிரச்சினை உள்ளது. அதற்கான உறுதிகள் உங்களுக்கு கிடைக்கவில்லை. அதனை இதுவரை இந்த அரசாங்கத்தினால் வழங்க முடியவில்லை. யுத்தத்தினால் காணாமல்போனவர்களுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்தை முன்னெடுக்கவில்லை. உங்களது விவசாய நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலமை என்னை விட உங்களுக்கு நன்கு தெரியும். இதுவே இன்று இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமையாகும். எனவே இந்த நிலமையை மாற்றி, உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவது எமது பொறுப்பாகும். என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
colombo:

කොළඹ

English - Sinhala