கடும் மழையால் புத்தளத்தில் அதிகமானோர் பாதிப்பு

கடும் மழையால் புத்தளத்தில் அதிகமானோர் பாதிப்பு

by Staff Writer 28-10-2019 | 7:06 PM
Colombo (News 1st) பலத்த மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 8257 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. 371 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 11 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர்முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் P.A.J. ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இதேவேளை, மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் தொடர்ந்தும் மழையுடனான வானிலை நிலவுவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 150 முதல் 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அத்துடன் நுவரெலியா, பதுளை, மாத்தளை மாவட்டங்களிலும் தென், வட மேல் மாகாணங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் திணைக்களம் தெரிவித்துள்ளது.