by Staff Writer 28-10-2019 | 3:54 PM
Colombo (News 1st) ஆர்ஜென்டீன ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் அல்பேர்ட்டோ பெர்னாண்டஸ் (Alberto Fernández) வெற்றி பெற்றுள்ளார்.
பொருளாதாரம் தொடர்பான கரிசனைகள் தேர்தலில் செல்வாக்குச் செலுத்தியிருந்த நிலையில் மத்திய வலதுசாரி வேட்பாளரான இவர் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வெற்றி பெறுவதற்குத் தேவையான 45 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பதவியிலிருந்த ஜனாதிபதி மவுரிசியோ மக்ரியை அவர் தோற்கடித்துள்ளார்.
ஆர்ஜென்டீனாவில் பொருளாதார நெருக்கடி நிலவிய சந்தர்ப்பத்திலேயே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தது.
இந்தப் பொருளாதார நெருக்கடியினால் ஆர்ஜென்டீன சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.