அரச சொத்து பயன்பாடு தொடர்பில் விசாரணை

அரச சொத்து பயன்பாடு தொடர்பில் விசாரணை

by Fazlullah Mubarak 28-10-2019 | 10:57 AM

ஐனாதிபதித் தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களை விளம்பரப்படுத்துவதற்காக சட்டவிரோதமான முறையில் அரச சொத்துக்களைப் பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அரச சொத்துக்களை சட்டவிரோதமாகப் பயன்படுத்துகின்றமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறுகின்றமை தொடர்பில் விசாரணை செய்வதற்காக அதிகாரிகள் அந்ததந்த பகுதிகளுக்கு சென்று விசாரணைகளை முன்னெடுப்பதாக ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார். இதுவரை இவ்வாறான 5 அரச நிறுவனங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்த வேண்டாம் என அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் நிறுவன அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் 8 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 1835 முறைப்பாடுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதுடன் அதில் 1738 முறைப்பாடுகள் தேர்தல் சட்டத்தை மீறியமை குறித்து பதிவாகியுள்ளன.

ஏனைய செய்திகள்