by Staff Writer 28-10-2019 | 3:47 PM
Colombo (News 1st) சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்காக 16 650 மில்லியன் ரூபா இலகு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக 'சஞ்சாரக்க பொட்டோ', 'ஜய இசுறு' உள்ளிட்ட 5 இலகு கடன் திட்டங்களை நிதியமைச்சு அறிமுகம் செய்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இவற்றுக்கு மேலதிகமாக சுற்றுலாத்துறைக்கு அறவிடப்பட்டு வந்த 15 சதவீத வரி தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.