by Fazlullah Mubarak 28-10-2019 | 10:42 AM
Colombo (News 1st) முல்லைத்தீவில் தங்கச் சிலையொன்றை பெற்றுக் கொள்ளும் நோக்கில், ஒருவரை கடத்திச் செல்ல திட்டமிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் சீருடையைப் பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட முயற்சித்தமை மற்றும் கடத்தலைத் திட்டமிட்டமை ஆகிய குற்றச்சாட்டிகளின் கீழ், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் தொடர்பிலான விசாரணைகள் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.