சிறுவன் சுஜித்திற்காக யாழில் பிரார்த்தனை

சிறுவன் சுஜித்திற்காக யாழில் பிரார்த்தனை

சிறுவன் சுஜித்திற்காக யாழில் பிரார்த்தனை

எழுத்தாளர் Fazlullah Mubarak

27 Oct, 2019 | 3:38 pm

திருச்சியில் ஆழ் துளையில் சிக்கியுள்ள சிறுவன் சுஜித் உயிருடன் மீட்கப்பட வேண்டுமென யாழ் – கோப்பாயில் மக்கள் ஒன்று திரண்டு மௌனப் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை தவிசாளர் தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு கோப்பாய் கண்ணகை அம்மன் சனசமூக நிலையத்தில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராம அமைப்புக்களின் தலைவர்கள், சனசமூக நிலையத் தலைவர்கள் எனப் பலரும் ஒன்று கூடியிருந்தனர்.

சிறுவன் சுஜித்தை மீட்கும் பணிகள் கடந்த 43 மணித்தியாலங்களாக முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும், சிறுவன் சுஜித் சுவாசிப்பது தொடர்பில் எவ்வித அறிகுறியும் தென்படவில்லை என தமிழக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்