உர தட்டுப்பாடு நிலவவில்லை: விவசாய அமைச்சு

உர தட்டுப்பாடு நிலவவில்லை: விவசாய அமைச்சு தெரிவிப்பு

by Staff Writer 26-10-2019 | 6:56 PM
Colombo (News 1st) நாட்டில் உர வகைகள் எவற்றிற்கும் தட்டுப்பாடு நிலவவில்லையென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. உரத் தட்டுப்பாடு தொடர்பான ஏதாவது பிரச்சினைகள் இருக்குமாயின், தேசிய உர செயலகத்தின் 0112 03 43 23 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொள்ளுமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. பெரும்போக உற்பத்திக்கு தேவையான உரத்திற்கு மேலதிகமாக இடைக்கால பயிர் உற்பத்திக்கு தேவையான உர வகைகளும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 13 தனியார் நிறுவனங்களுக்கு உர இறக்குமதி மற்றும் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.