by Staff Writer 25-10-2019 | 10:23 PM
Colombo (News 1st) 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஷ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.
உபாதையிலிருந்து மீண்டு வந்து அனிதா ஜெகதீஷ்வரன் இந்த வெற்றியை ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஆடவருக்கான பரிதி வட்டம் எறிதலில் கிழக்கு மாகாணத்தின் நட்சத்திரமான Z.T.M. ஆஷிக் தங்கப்பதக்கம் வென்றார்.
போட்டியில் அவர் 43.59 மீட்டர் தூரத்திற்கு திறமையை வெளிப்படுத்தினார்.
இன்று மாலை மின்னொளியில் நடைபெற்ற ஆடவருக்கான 10,000 மீட்டர் ஓட்டப்போட்டியில் மத்திய மாகாணத்தின் குமார் சண்முகேஷ்வரன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
10,000 மீட்டரை அவர் 31 நிமிடங்கள் 25.59 செக்கன்ட்களில் பூர்த்தி செய்தார்.
இந்தப் போட்டியில் மேல் மாகாணத்தின் ஆர்.எம்.எஸ். புஸ்பகுமார தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.
அவர் சண்முகேஷ்வரனை விட 3 செக்கன்ட்கள் குறைவான காலப்பெறுதியில் போட்டியை நிறைவு செய்தார்.