பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சஜித், கோட்டாவிற்கு மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு

பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சஜித், கோட்டாவிற்கு மக்கள் விடுதலை முன்னணி அழைப்பு

எழுத்தாளர் Bella Dalima

25 Oct, 2019 | 9:15 pm

Colombo (News 1st) பகிரங்க விவாதத்திற்கு சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ தரப்பினால் கடந்த சில தினங்களாக கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மக்கள் விடுதலை முன்னணி இந்த இரண்டு வேட்பாளர்களுக்கும் சவால் விடுத்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் சஜித் பிரேமதாச இருவரும் அனுரகுமார திசாநாயக்கவுடன் விவாதத்திற்கு வர வேண்டும் எனவும் விவசாயம், கைத்தொழிலை எவ்வாறு மேம்படுத்துவது, கல்வியை எவ்வாறு மேம்படுத்துவது, வீதிகளை எவ்வாறு அமைப்பது, பொருளாதாரத்தை மேம்படுத்தி நாட்டு மக்கள் வாழக்கூடிய வகையில் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்புவது என்பது தொடர்பில் இவ்விருவரும் அனுரகுமார திசாநாயக்கவுடன் விவாதிக்க வேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்