45ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று ஆரம்பம்

by Staff Writer 24-10-2019 | 9:38 AM
Colombo (News 1st) 45 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று (24) ஆரம்பமாகவுள்ளது. MTV/MBC சம்பியன்ஸ் நெட்வேர்க் இம்முறை விளையாட்டு விழாவுக்கு ஊடக அனுசரணை வழங்குகின்றது. பதுளை வின்சன்ட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள இந்த 45ஆவது தேசிய விளையாட்டு விழா, எதிர்வரும் 27ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. 45 ஆவது தேசிய விளையாட்டு விழாவானது, விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் தலைமையில் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.