by Bella Dalima 24-10-2019 | 8:24 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டிருந்தார்.
காலி மாவட்டத்தில் இன்று காலை முதல் பெய்த கடும் மழைக்கு மத்தியில் அதிகளவிலானோர், காலி - கரன்தெனியவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
அங்கு கூடியிருந்தவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு அமோக வரவேற்பளித்தனர்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அரசியல்வாதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் இதன்போது சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதேவேளை, கம்பஹா - ஜா-எல பிரதேசத்தில் நேற்றிரவு பிரசாரக் கூட்டமொன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி சுகபோகம் அனுபவிக்க, யாழ்ப்பாணத்தில் அரச மாளிகையொன்றை நிர்மாணிக்க முடியும் எனின், சமுர்த்தி மற்றும் ஜன சவிய ஆகிய இரண்டையும் ஒன்றாக வழங்குவதில் என்ன சிரமம் இருக்கின்றது என கேள்வி எழுப்பினார்.
பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
இதேவேளை, Mega Minds புத்திஜீவிகள் சந்திப்பு களனியவில் நேற்று நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது, நன்மைகள் அதிகமான, நட்டம் குறைவான கொள்கைகளே நாட்டிற்கு அவசியம் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.