துருக்கி மீதான அமெரிக்க தடைகள் தளர்த்தம்

துருக்கி மீதான அமெரிக்க தடைகள் தளர்த்தம்

by Chandrasekaram Chandravadani 24-10-2019 | 12:48 PM
Colombo (News 1st) துருக்கி மீதான தடைகளை அமெரிக்க தளர்த்தியுள்ளது. சிரியாவின் வட பிராந்தியத்தில் துருக்கியால் இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு 9 நாட்களின் பின்னர் தடைகளை தளர்த்தி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். சிரியாவில் ரஷ்ய படையினரை நிலைகொள்ளவைக்க இணக்கம் தெரிவிப்பதாக துருக்கியால் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்காவால் எதிர்பாராத விதமாக சிரியாவிலிருந்து படையினர் மீள அழைக்கப்பட்டதன் பின்னர், துருக்கியால் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.