ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் வௌியீடு

by Bella Dalima 24-10-2019 | 10:22 PM
Colombo (News 1st) தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வௌியிடப்பட்டது. கொழும்பு மன்றக் கல்லூரியில் இன்று மாலை இந்த நிகழ்வு இடம்பெற்றது. 71 வருட சம்பிராதயப்பூர்வ அரசியல் பயணத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி, இலங்கைக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார். ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வௌியிட்ட பின்னர் கருத்து தெரிவித்தார். நடுநிலையான ஜனாதிபதி, நாட்டிற்கு பொறுப்புக்கூறும் ஆட்சி, 20 வரை குறைவடைந்த அமைச்சரவை, தேசிய பாதுகாப்பு, பொருளாதாரம், சட்டத்தை பலப்படுத்துதல், கல்வியை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கிய கொள்கைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.