ரயில் பெட்டிகள் தடம் புரண்டமை குறித்து ஆராய குழு

அவுக்கனையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டமை குறித்து ஆராய விசேட குழு நியமனம்

by Staff Writer 24-10-2019 | 1:45 PM
Colombo (News 1st) அவுக்கணையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டமை தொடர்பில் ஆராய்வதற்கு நால்வரடங்கிய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டமையினால் போக்குவரத்து தடைப்பட்டிருந்த திருகோணமலை - மட்டக்களப்பு வரையிலான ரயில் சேவை இன்றிரவு வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனிடையே, தடம்புரண்டிருந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் தண்டவாளத்தில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தண்டவாளத்தில் காணப்படும் ரயில் எஞ்சினை இன்று பிற்பகல் வேளையில் அகற்றுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர் கூறியுள்ளார். இதன்பின்னர், ரயில் சேவை வழமை போன்று இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.