பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நடவடிக்கை

எழுத்தாளர் Bella Dalima

24 Oct, 2019 | 4:53 pm

Colombo (News 1st) கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கொழும்பு – லோட்டஸ் வீதியை மறித்து மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தினால் கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால், கொழும்பு நோக்கி வருவோரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வாழ்க்கைச் செலவிற்கு அமைய மஹபொல புலமைப்பரிசில் கொடுப்பனவை அதிகரிக்குமாறு மாணவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்