அநுராதபுரம் – புத்தளம் வீதியில் மரத்துடன் வேன் மோதி விபத்து: குழந்தை உள்ளிட்ட மூவர் பலி

அநுராதபுரம் – புத்தளம் வீதியில் மரத்துடன் வேன் மோதி விபத்து: குழந்தை உள்ளிட்ட மூவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

24 Oct, 2019 | 3:59 pm

Colombo (News 1st) அநுராதபுரம் – புத்தளம் வீதியில் 4 ஆம் கட்டையில் வேனொன்று மரத்துடன் மோதி விபத்திற்குள்ளானதில் 3 வயது குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வேன் மரத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

நாத்தாண்டியா , களுத்துறை மற்றும் பங்கதெனிய பகுதிகளை சேர்ந்தவர்களே அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்