சஹ்ரானுடன் தொடர்பு:குற்றச்சாட்டிற்கு ஹக்கீம் பதில்

சஹ்ரானுடன் தொடர்புபடுத்தி முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுகளுக்கு ஹக்கீம் பதில்

by Bella Dalima 23-10-2019 | 7:54 PM
Colombo (News 1st) பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புபடுத்தி தம் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் தௌிவூட்டுவதற்காக அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தார். ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்,
2015 ஆம் ஆண்டில் யார் இந்த சஹ்ரான், அவரின் செயற்பாடுகள் என்ன என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. அவரது கடும்போக்கு வாதம் எவ்வாறானது என்பது தொடர்பில் எமக்கு தௌிவிருக்கவில்லை. பள்ளிவாசலில் மக்கள் சந்திப்பு இடம்பெற்றால், அதிகளவிலானவர்கள் வருவார்கள். அவர்களில் இவ்வாறானவர்களும் இருப்பார்கள் என நான் அறிந்திருக்கவில்லை. இத்தகைய விடயங்கள் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் ஏற்படலாம்.
என குறிப்பிட்டார்.