இடைக்கால கணக்கறிக்கைக்கு பாராளுமன்றம் அனுமதி

இடைக்கால கணக்கறிக்கைக்கு பாராளுமன்றம் அனுமதி

by Bella Dalima 23-10-2019 | 6:47 PM
Colombo (News 1st)  2020 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 1474 பில்லயன் ரூபா பெறுமதியான இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. எவ்வித திருத்தங்களும் இன்றி இடைக்கால கணக்கறிக்கைக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், மக்கள் விடுதலை முன்னணி இந்த இடைக்கால கணக்கறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் இன்று முற்பகல் சமர்ப்பிக்கப்பட்டது. ஜனவரி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான நான்கு மாதங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்த கணக்கறிக்கைக்கு அமைய அரசாங்கத்தின் உத்தேச செலவீனம் 1474 பில்லியன் ரூபாவாகும். வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. இதற்கமைய, இன்று இடைக்கால கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நான்கு மாதங்களுக்கான கடன் எல்லையாக 721 பில்லியன் ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.