போதைப்பொருளுடன் கைதான இந்தியப் பிரஜைக்கு ஆயுள் தண்டனை

போதைப்பொருளுடன் கைதான இந்தியப் பிரஜைக்கு ஆயுள் தண்டனை

போதைப்பொருளுடன் கைதான இந்தியப் பிரஜைக்கு ஆயுள் தண்டனை

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2019 | 11:50 am

Colombo (News 1st) கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை ஒருவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்தியப் பிரஜை, ஒரு கிலோ 4 கிராம் ஹெரோயினுடன் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஹெரோயினைத் தம்வசம் வைத்திருந்தமை, ஹெரோயினை இறக்குமதி செய்தமை, விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுகள், குற்றவாளி மீது சுமத்தப்பட்டிருந்தன.

வழக்கு விசாரணைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நேற்றைய தினம் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்