பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

பிரதமருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2019 | 7:45 am

Colombo (News 1st) கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று (23) ஆஜராகுமாறு பிரதமர் ரணில் விக்மரசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே பிரதமர் இன்று அழைக்கப்பட்டுள்ளார்.

மத்தளை விமான நிலையத்தில் நெல் களஞ்சியப்படுத்தப்பட்டதால், அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் அண்மையில் அமைச்சர் தயா கமகே ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளித்திருந்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்