by Staff Writer 23-10-2019 | 1:18 PM
Colombo (News 1st) மஹரகம - பன்னிப்பிட்டிய, தெபானம பகுதியில் இளைஞர் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீண்டகாலமாக இருந்த தனிப்பட்ட தகராறினால் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே மோதல் இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மஹரகம - பன்னிப்பிட்டிய, தெபானம பகுதியில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு முன்பாக குறித்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று (23) அதிகாலை 12.20 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
தெபானம பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞரே கொலை செய்யப்பட்டுள்ளார்.