தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விசேட கலந்துரையாடல்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2019 | 10:08 pm

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடி விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் மாலை 4.30 வரை இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்தன், எஸ்.சிவமோகன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இன்றைய கலந்துரையாடல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் இன்றும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்த அவர், அடுத்த வாரம் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் கலந்துரையாடவுள்ளதாக அறிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்