கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்

கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்

கோப் குழுவின் உறுப்பினராக திலங்க சுமதிபால நியமனம்

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2019 | 1:50 pm

Colombo (News 1st) சந்திரசிறி கஜதீரவின் மறைவிற்கு பின்னர் நிலவிய கோப் குழுவின் உறுப்பினர் வெற்றிடத்திற்கு திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி அறிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர இயற்கை எய்தியதைத் தொடர்ந்து நிலையியல் கட்டளைச்சட்டம் 127(3) கீழ் 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி பாரளுமன்றத் தெரிவுக்குழுவின் அடிப்படையில் திலங்க சுமதிபால குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், திலங்க சுமதிபால நியமிக்கப்பட்டமைக்கு மக்கள் விடுதலை முன்னணி எதிர்ப்பு வௌியிட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் அவர்களே திலங்க சுமதிபாலவிற்கு எதிராக கோப் குழுவில் விசாரணை இடம்பெறுகின்றது. சபாநாயகர் என்ற வகையில் உங்களுக்கு அதிகாரம் உள்ளது. கிரிக்கெட் சபையில் விசாரணை இடம்பெறுகின்றபோது அவரைத் தெரிவுசெய்வது முறையற்ற செயற்பாடு. எனவே அந்த விசாரணைகள் நிறைவுறும் வரை அவரை குழுவுக்குத் தெரிவு செய்வதை நிறுத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க எதிர்ப்பு வௌியிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்