கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

இடைக்கால கணக்கறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

எழுத்தாளர் Staff Writer

23 Oct, 2019 | 1:26 pm

Colombo (News 1st) 2020 ஆம் ஆண்டின் முதல் 4 மாதங்களுக்கான அரச செலவீனங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கை நிதி அமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரையான 4 மாதங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள இந்தக் கணக்கறிக்கைக்கு அமைய அரசாங்கத்தின் உத்தேச செலவீனம் 1474 பில்லியன் ரூபாவாகும்.

வருட இறுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த வருடத்திற்கான வரவுசெலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதற்கமைவாகவே இன்று இடைக்கால கணக்கறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த 4 மாதங்களுக்கான கடன் எல்லையாக 721 பில்லியன் ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்