பிச்சைக்கார பொருளாதாரக் கொள்கையை உருவாக்க மாட்டோம்

பிச்சைக்கார பொருளாதாரக் கொள்கையை உருவாக்க மாட்டோம் - அனுரகுமார திசாநாயக்க

by Staff Writer 22-10-2019 | 6:56 AM
Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க இன்று (21) தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைப் பிரகடனத்தை வெளியிட்டுள்ளார். கொழும்பு மன்றக் கல்லூரியில் இந்த நிகழ்வு இடம்பெற்றதுடன் பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இணைந்து இந்தக் கொள்கையைத் தயாரித்துள்ளனர்.
அமெரிக்கத் தூதரகத்திற்கு எமது நாட்டின் அதிக வேலைகள் இருக்கின்றது என்பதை நாம் அறிவோம். கட்சிகளுக்குள் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதனைத்தீர்க்க வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. தலைவர்களைத் தெரிவுசெய்வது யார் என்பதை தீர்மானிக்கின்றனர். அவர்களின் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்காக சட்டங்களை வகுக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. இவ்வாறு எந்த நாட்டிலாவது தூதரகத்திற்கு வேலைகள் இருக்குமா? உண்மையில் வர்த்தக்கத்தூது சேவையை தூதரகம் மேற்கொள்கின்றது. தூதுவரின் நாட்குறிப்பேட்டைப் பார்த்தால் தினமும் இரவு நேர விருந்துபசாரம் இருக்கும். எமது நாட்டில் வருமான வரிக் கோவைகள் 2 75 000 காணப்படுகின்றன. அது மிகவும் சிறியளவாகும். இந்த 2 75 000 வருமான வரிக் கோவைகளை அங்கும் இங்கும் பிரட்டுவதே வரவுசெலவுத் திட்டம் எனக் கூறப்படுகின்றது. ஆகக் குறைந்தது. 5 இலட்சம் வருமான வரிக்கோவைகளை எமது நாட்டில் உருவாக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். தற்போது வரி அறவிடாதவர்களிடம் சென்று வரியை அறவிட வேண்டும் என்பது இதன் கருத்து அல்ல. சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கான வகுப்பை உருவாக்க வேண்டும். இந்தத் தேர்தல் மேடைகளில் 2 பொருளாதாரக் கொள்கைகள் தொடர்பில் பேசப்படுகின்றது. ஒன்று பிச்சைக்காரப் பொருளாதாரக் கொள்கையாகும். நாம் பிச்சைக்காரப் பொருளாதாரக் கொள்கையை உருவாக்க மாட்டோம். அபிவிருத்தி பொருளாதாரக் கொள்கையையே உருவாக்குவோம்
என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க கருத்துத் தெரிவித்துள்ளார்.