சிரியாவில் அமெரிக்கப் படையினர் நிலைகொள்வர்

சிரியாவில் தொடர்ந்தும் அமெரிக்கப் படையினர் தங்கியிருப்பர்

by Staff Writer 22-10-2019 | 2:06 PM
Colombo (News 1st) சிரியாவில் அமெரிக்கப் படையினர் சிலர் தங்கியிருப்பர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சிரியாவிலிருந்து அமெரிக்கப் படையினரை வௌியேறுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ள போதிலும் சிலர் அங்கு நிலைகொள்ளவுள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அவர்களில் சிறிய தொகையினர் எண்ணெய் உற்பத்தி செய்யப்படும் நிலைகளைப் பாதுகாக்கவுள்ளதுடன், ஏனையோர் இஸ்ரேல் மற்றும் ஜோர்தானுக்கு அருகில் தங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிரிய - துருக்கி எல்லையிலிருந்து அமெரிக்கப் படைகளை மீளப்பெறும் ட்ரம்ப்பின் தீர்மானம், அவரது ஆதரவாளர்கள் உட்பட பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையிலேயே அமெரிக்கப் படைகளுடன் கூட்டாகவிருந்த குர்திஷ் படைகள் மீது துருக்கி பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.