ஸிம்பாப்வேயில் கடும் வறட்சி; 55 யானைகள் உயிரிழப்பு

ஸிம்பாப்வேயில் கடும் வறட்சி; 55 யானைகள் உயிரிழப்பு

ஸிம்பாப்வேயில் கடும் வறட்சி; 55 யானைகள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2019 | 12:15 pm

Colombo (News 1st) ஸிம்பாப்வேயில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக குறைந்தது 55 யானைகள் உணவின்றி உயிரிழந்துள்ளன.

கடந்த 2 மாதங்களாக நிலவும் கடும் வறட்சியினால் ஸிம்பாப்வேயின் Hwange தேசிய பூங்காவில் இருந்த யானைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளன.

யானைகளின் உயிரிழப்புக்கு பட்டினியே காரணம் எனவும் இதுவொரு பாரிய பிரச்சினை எனவும் குறித்த பூங்காவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஸிம்பாப்வேயில் வறட்சியினால் பயிர் விளைச்சல் பாரியளவில் குறைவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதனிடையே நாட்டில் பொருளாதார நெருக்கடியும் நீடிப்பதால், மொத்த சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் உணவு உதவிகளை எதிர்பார்த்துள்ளதாக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்