மின்னியல் வல்லுநர்களுக்கு தொழில் அனுமதிப்பத்திரம் 

மின்னியல் வல்லுநர்களுக்கு தொழில் அனுமதிப்பத்திரம் 

மின்னியல் வல்லுநர்களுக்கு தொழில் அனுமதிப்பத்திரம் 

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2019 | 9:04 am

Colombo (News 1st) இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு மற்றும் நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி அதிகாரசபை இணைந்து மின்னியல் வல்லுநர் தொழில் அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

மின்னியல் வல்லுநர்களின் தொழில் பாதுகாப்பை உறுதி செய்வது மற்றும் முறையான அறிவை ஒன்றிணைப்பதை நோக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் 30 000 மின்னியல் வல்லுநர்கள் (Electricians) இருப்பது மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இவர்களுள் ஒரு பகுதியினர் முறையான சான்றிதழ் பெற்றிருப்பினும் ஏனையோர் சுயமாக இதனை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறானவர்கள் மேற்கொள்ளும் வீட்டு மின்சார இணைப்புக்கள் உரிய தரத்தைக் கொண்டதாக இல்லை என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இலங்கை பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்