களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2019 | 1:34 pm

Colombo (News 1st) களனி கங்கையின் நீர்மட்டம், நாகலகம் வீதி, ஹங்வெல்ல மற்றும் கலென்கொஸ் பகுதிகளில் அதிகரித்துள்ளது.

இதனால் இதனை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வாழும் மக்களை அவதானமாக இருக்குமாறு இடர்முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, அத்தனுகலு ஓயாவின் நீர்மட்டம் தூனமலை பகுதியில் வௌ்ளமட்டத்தை அண்மித்துள்ளது.

இதன்காரணமாக நீர்கொழும்பு, கட்டான, மினுவங்கொட, ஜாஎல, கம்பஹா, அத்தனகல்ல, பகுதிகளில் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் இடர்முகாமைத்துவ நிலையம் ஆலோசனை வழங்கியுள்ளது.

இன்று (22) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் அதிக மழைவீழ்ச்சி கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட பிரதேசத்தில் 135 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

எதிர்வரும் சில மணித்தியாலங்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று பதவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக கண்டி மாவட்டத்தில் 6 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பதினாறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்