அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் தூண்டப்படுவதாக மகேஷ் சேனாநாயக்க கருத்து

அரசியல் நோக்கங்களுக்காக இனவாதம் தூண்டப்படுவதாக மகேஷ் சேனாநாயக்க கருத்து

எழுத்தாளர் Bella Dalima

22 Oct, 2019 | 9:37 pm

Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளர் மகேஷ் சேனாநாயக்க இன்று பலாங்கொடையில் இடம்பெற்ற தேசிய மக்கள் கட்சியின் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துகொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க,

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை முஸ்லிம் மக்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையிலான பல பதிவுகளை காண முடிருந்தது. ஆனால், அவற்றை தற்போது காண முடியவில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றமையே அதற்கு காரணம். அவற்றை நவம்பர் 17 ஆம் திகதியின் பின்னர் மீண்டும் காணலாம். அவர்கள் அதனை பயன்படுத்தியே வாழ்கின்றனர். கருணா, பிள்ளையான், ஹிஸ்புல்லா, ஹக்கீம் அனைவரும் அதனையே செய்கின்றனர்

என குறிப்பிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்