அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் தோல்வியடைந்த இஸ்ரேலிய பிரதமர்

அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் தோல்வியடைந்த இஸ்ரேலிய பிரதமர்

அரசாங்கத்தை ஸ்தாபிப்பதில் தோல்வியடைந்த இஸ்ரேலிய பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

22 Oct, 2019 | 9:15 am

Colombo (News 1st) தம்மால் அரசாங்கமொன்றை ஸ்தாபிக்க முடியாது என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.

இதனால் அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் வாய்ப்பைத் தமக்கெதிராகப் போட்டியிட்ட பெனி கண்ட்ஸுக்கு (Benny Gantz) வழங்கியுள்ளார்.

தசாப்த காலம் ஆட்சியிலிருந்த பெஞ்சமின் நெதன்யாஹு, கடந்த மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருந்தது.

இருப்பினும், கூட்டணி ஒன்றை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளில் தாம் முழுவீச்சுடன் செயற்பட்டதாகவும் இருப்பினும் அந்த முயற்சி தோல்விகண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் கூட்டணி அரசாங்கம் அமைக்கும் தமது முயற்சியைக் கைவிட்டு, எதிர்த்தரப்பினருக்கு அந்த வாய்ப்பை வழங்கும் அறிவிப்பை அவர் வௌியிட்டுள்ளார்.

இந்தநிலையில், நீலம் மற்றும் வௌ்ளை கட்சியின் பெனி கண்ட்ஸுக்கு ஆட்சி அமைப்பதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பேச்சுவார்த்தைகளை நடத்தி ஆட்சியமைப்பதற்கு 28 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ரூவன் ரிவ்லின் (Reuven Rivlin) தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்