ஜனாதிபதி தேர்தலில் 14,000 கண்காணிப்பாளர்கள்

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் 14 ஆயிரத்துக்கும் அதிக கண்காணிப்பாளர்கள்

by Fazlullah Mubarak 21-10-2019 | 7:28 AM

ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பில் 14 000 இற்கும் அதிக  கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, தமது அமைப்பின் சார்பில் 5000 இற்கும் அதிகமானோரை ஈடுபடுத்தவுள்ளதாக PAFFREL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சிகளை எதிர்வரும் ஓரிரு நாட்களில் நிறைவுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, 2000 கண்காணிப்பார்களை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஈடுபடுத்தவுள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பகம் கூறியுள்ளது. அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் குறித்த உறுப்பினர்கள், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கண்காணிப்பகத்தின் தேசிய அமைப்பாளர் ரசாங்க ஹரிஸ்சந்திர தெரிவித்துள்ளார். அத்துடன், தேர்தல் தொடர்பிலான முறைப்பாடுகளை ஏற்பதற்காக அலுவலகங்களை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, கெபே அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி 7500 கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கெபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஹமட் மனாஸ் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்