சஜித் பிரேமதாசவின் மகளிர் கொள்கைப்பிரகடனம் வௌியீடு

சுயாதீன பெண்கள் ஆணைக்குழுவை ஸ்தாபிப்பேன் - சஜித் பிரேமதாச 

by Staff Writer 21-10-2019 | 8:46 PM
Colombo (News 1st) புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மகளிர் கொள்கைப் பிரகடனம் கொழும்பில் இன்று (21) வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம் பெற்ற மாநாட்டிற்கு தனது தாயாரான ஹேமா பிரேமதாசவுடன் சஜித் பிரெமதாச வருகை தந்தார். நாட்டின் பெண்களின் உரிமைகளை பாதுகாத்தால், சம அந்தஸ்து வழங்கல் மற்றும் நியாயத்தை வழங்கும் நோக்கிலான இந்த கொள்கை பிரகடனத்தில் சஜித் பிரெமதாச கையெப்பமிட்டுள்ளார்.
பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்கி அவர்களுக்கு நியாயத்தை வழங்கும் நோக்கில் நாம் இந்த கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுகின்றோம். பெண்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக இன, மத, உள ரீதியாக வேறுபாடுகள் காண்பிக்கக் கூடாது என்பதை இதில் வலியுறுத்தியுள்ளோம். மொழி, பொருளாதாரத்தின் மூலம் உள்ளிட்ட சமூகத்தில் காணப்படும் அனைத்து அநீதிகளையும் இல்லாமல் செய்வதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவென். இன்று வெளியிடப்படும். கொள்கைப் பிரகடனத்தை வெற்றிபெறச் செய்து 3 மாதங்களில் பாராளுமன்றத்தில் சட்டமாகக் கொண்டு வருவதற்கு செயற்படுவேன் என்பதனையும் கூறுகின்றேன். நான் இந்த நாட்டின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் சுயாதீன பெண்கள் ஆணைக்குழு ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளேன். விவசாயம் உள்ளிட்ட அனைத்து சுய தொழில்களிலும் ஈடுபடும் பெண்களுக்காக காப்புறுதித் திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்வேன். அத்துடன் சுயதொழிலைப் பலப்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுப்பேன். அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றும் சிறு பிள்ளைகளைக் கொண்ட பெண்களைக் கருத்தில்கொண்டு பெண்களுக்காக அந்த நிறுவனத்தை அண்மித்த பகுதிகளில் அவர்களைப் பராமரிக்கும் நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். மகப்பேற்று விடுமுறை காரணமாக சில பெண்கள் தொழிலை இழக்கின்றனர். தொழில் வழங்குநர்கள் அவர்களுக்காக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றனர். தொழிலை இழந்த அனைத்து பெண்களுக்கும் தொழில் காப்புறுதிகளை வழங்க நான் நடவடிக்கை எடுப்பேன். யுத்தத்தில் இடம்பெயர்ந்த அல்லது விதவைகள் ஆகியுள்ள அல்லது பெண் தலைமைத்துவ குடும்பங்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையிலான திட்டங்கள் உருவாக்குவேன். 16ஆம் திகதி நான் ஜனாதிபதியாகப் பதவியேற்ற தருணத்திலிருந்து முழு இலங்கையிலும் நுண்கடன் நிறுவனங்கள் மூலம் அதிக வட்டிக்குக் கடன்கள் பெற்ற பெண்களின் முழுமையான கடனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன். பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக செயலணி ஒன்றை உருவாக்குவேன். அந்த செயலணியின் பிரிவுகளை அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் உருவாக்குவேன். மதுபானக் கடைகளுக்கு ஒருபோதும் புதிதாக அனுமதிப் பத்திரங்களை வழங்க மாட்டேன். பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் காணப்படும் மதுபானக் கடைகளை மூடுவதற்கு நான் உறுதியாக நடவடிக்கை எடுப்பேன்
என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்