மழையுடனான வானிலையால் மரக்கறி உற்பத்தியில் வீழ்ச்சி

மழையுடனான வானிலையால் மரக்கறி உற்பத்தியில் வீழ்ச்சி

மழையுடனான வானிலையால் மரக்கறி உற்பத்தியில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2019 | 3:02 pm

Colombo (News 1st) தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்துக்குக் கொண்டுவரப்படும் மரக்கறிகள் 25 இலட்சம் கிலோகிராமுக்கும் குறைவடைந்துள்ளதாக நிலையத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் கடும் மழையுடனான வானிலையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் சாந்த ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று கருவாடு ஒரு கிலோகிராமின் விலை 200 ரூபாய்க்கும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்