தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பிற்கு பிரதமர் அழைப்பு

தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பிற்கு பிரதமர் அழைப்பு

தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பிற்கு பிரதமர் அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

21 Oct, 2019 | 6:54 pm

Colombo (News 1st) பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் கோரிக்கை ஆவணத்தில் கையொப்பமிட்ட 5 கட்சிகளின் கூட்டமைப்பை சந்திப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் நியூஸ்பெஸ்ட்டுக்குத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் கட்சிகள் முன்னெடுக்கக்கூடிய தீர்மானங்கள் தொடர்பில் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தில் கடந்த 14 ஆம் திகதி 5 கட்சிகள் கையொப்பமிட்டன.

கையொப்பமிடப்பட்ட 13 அம்ச கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்தத்துடன் பிரதமரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக சி.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைத் தமிழசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய 5 கட்சிகள் இந்தக் கூட்டமைப்பிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்