இந்தோனேஷிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ இரண்டாவது தடவையாகவும் பதவியேற்பு

இந்தோனேஷிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ இரண்டாவது தடவையாகவும் பதவியேற்பு

இந்தோனேஷிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ இரண்டாவது தடவையாகவும் பதவியேற்பு

எழுத்தாளர் Fazlullah Mubarak

21 Oct, 2019 | 7:32 am

Colombo (News 1st) இந்தோனேசிய ஜனாதிபதியாக ஜோக்கோ விடோடோ இரண்டாவது தடவையாகவும் பதவியேற்றுள்ளார்.

ஜோக்கோ விடோடோவின் உயர்மட்டப் பாதுகாப்பு அமைச்சரைக் கொலை செய்ய பயங்கரவாதிகள் முயற்சித்து, ஒரு சில தினங்களில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

நாட்டின் வௌிவிவகார தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் அடுத்த 5 வருட பதவிக் காலத்துக்கான உறுதிமொழியை ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ மற்றும் துணை ஜனாதிபதி மரூப் அமீன் ஆகியோர் வாசித்துள்ளனர்.

மற்றொரு தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்ற அச்சத்தின் மத்தியில் 30000 பாதுகாப்பு அதிகாரிகள் சூழ பதவியேற்பு வைபவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தேர்தலில் 55.5 வீத வாக்குகளைப் பெற்று ஜோக்கோ விடோடோ வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்