இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஐவர் தலைமன்னார் பியர் இறங்குதுறையில் கைது

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஐவர் தலைமன்னார் பியர் இறங்குதுறையில் கைது

இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஐவர் தலைமன்னார் பியர் இறங்குதுறையில் கைது

எழுத்தாளர் Fazlullah Mubarak

21 Oct, 2019 | 10:38 am

Colombo (News 1st) இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய ஐவர் தலைமன்னார் பியர் இறங்குதுறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக கடல்மார்க்கமாக நாடு திரும்பியவர்களை நேற்று கைது செய்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் பயணித்த படகொன்றும் கடற்படையினரால் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

பேசாலை, யாழ்ப்பாணம், தலைமன்னார் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 29 முதல் 49 வயதுக்கு இடைப்பட்டவர்களே கடற்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (21) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்