இந்தியாவிடம் மண்டியிடுமா தென்னாபிரிக்கா?

இந்தியாவிடம் மண்டியிடுமா தென்னாபிரிக்கா?

இந்தியாவிடம் மண்டியிடுமா தென்னாபிரிக்கா?

எழுத்தாளர் Fazlullah Mubarak

21 Oct, 2019 | 7:36 am

Colombo (News 1st) இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (21) தொடரவுள்ளது.

ராஞ்சியில் நடைபெறும் போட்டியில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 497 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது.

நேற்றைய இரண்டாம் நாளில் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த தென்னாபிரிக்கா 8 ஓட்டங்களுக்கு முதல் 2 விக்கெட்களையும் இழந்தது.

இதன்படி அணித்தலைவர் பப் டு பிளசிஸ் ஓர் ஓட்டத்துடனும் Zubayr Hamza ஓட்டமின்றிய நிலையிலும் இன்றைய ஆட்டத்தை தொடரவுள்ளனர்.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தப்போட்டி எஞ்சிய நிலையில் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 4 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, அந்த நான்கிலும் வெற்றியீட்டி 200 புள்ளிகளை சுவீகரித்துள்ளது.

தென்னாபிரிக்கா 2 போட்டிகளில் விளையாடியுள்ளது.

எவ்வாயினும் அந்த 2 போட்டிகளிலும் தென்னாபிரிக்கா தோல்வியடைந்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்