21 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி TV

21 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி TV

21 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சக்தி TV

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2019 | 7:02 am

Colombo (News 1st) மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்து தமிழ் பேசும் மக்களின் சக்தியாகத் திகழும் சக்தி Tv இன்று (20) தனது 21 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றது.

மரபுகளைத் தகர்த்த பாரதியின் புதுக்கவியாய் வீறு நடைபோடும் சக்தி தொலைக்காட்சி, தொலைக்காட்சி வரலாற்றில் படைத்த சாதனைகளோ ஏராளம்…

சாதனைப் பயணத்தில் 21 அகவையை பூர்த்திசெய்யும் சக்தி TV, 1998 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை தமிழ் தொலைகாட்சிகளின் முன்னோடியாய் புதுமைகளின் தாயகமாய் சக்தி TV விளங்கி வருகின்றது.

இலங்கை தொலைக்காட்சி துறைக்கு பாரிய பங்களிப்பினை வழங்கும் சக்தி TV முன்னணி தமிழ் ஊடகம் மாத்திரமின்றி இலங்கையின் முதல் நிலை ஊடகமாகவும் செயற்பட்டு வருகின்றது.

இரகசிகர்களின் இதயங்களை வென்ற சக்தி TV, தடைக்கற்களைத் தகர்த்து வெற்றி நடைபோட நியூஸ்பெஸ்ட்டின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

சக்தி தொலைக்காட்சியின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்