ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

by Staff Writer 20-10-2019 | 9:23 AM
Colombo (News 1st) பேலியகொட - வனவாசல பகுதியில் ஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கரவண்டியொன்றில் ஹெரோயின் கடத்திய சந்தர்ப்பத்திலேயே, பொலிஸாரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 51 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கொழும்பு - 10 மற்றும் பேலியகொட பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 23 வயதான இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் புதுக்கடை நீதவான் முன்னிலையில் இன்று (20) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.