மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

20 Oct, 2019 | 7:05 am

Colombo (News 1st) மழையுடனான வானிலையால் கேகாலை, இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று (20) மாலை 6 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை, இம்புல்பே மற்றும் ஓப்பநாயக்க பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கும் கோகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

மண்சரவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள் பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மண்சரிவு ஆய்வுப்பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றும் நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்