ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் புதிய ஒப்பந்தம்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஜப்பானிய நிறுவனத்துடன் முனைய சேவை ஒப்பந்தத்தில் கைச்சாத்து

by Staff Writer 19-10-2019 | 3:53 PM
Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் ஜப்பானிய நிறுவனமொன்றுடன் முனைய சேவை ஒப்பந்தத்தில் (Terminal Service Agreement) கைச்சாத்திட்டுள்ளது. 130 வருட வரலாற்றைக்கொண்ட Nippon Yusen Kaisha (NYK) எனும் குறித்த நிறுவனம் ஜப்பானின் மிகப்பெரிய நிறுவனம் என்பதுடன் உலகின் முதற்தர கப்பல் நிறுவனமாகவும் திகழ்கிறது. இந்த முனைய சேவை ஒப்பந்தத்தின் கீழ் ஹம்பாந்தோட்டை நிறுவனத்திற்கு கொண்டுவரப்படும் இயந்திரங்கள் மற்றும் சரக்குகள் உலகின் பல பகுதிகளுக்கும் கப்பல் போக்குவரத்தினூடாக கொண்டு செல்லப்படவுள்ளன.